August 6, 2025
தண்டோரா குழு
கோவை ராவ் மருத்துவமனை சார்பில் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், தாய்ப்பால் மற்றும் அப்பால் என்ற விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது.
ரோட்டரி ஆக்ருதி,பிக்கி ஃப்ளோ மற்றும் பென்டா லேடீஸ் சர்க்கிள் எண்.37 ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், கர்ப்பிணி மற்றும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பங்கேற்றனர்.இந்நிகழ்வில் தாய்ப்பாலின் அவசியம், ஆரம்ப ஊட்டச்சத்து மற்றும் சரியான பாலூட்டும் முறைகள் குறித்து தெளிவான தகவல்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ராவ் மருத்துவமனையின் நியோனட்டாலஜிஸ்ட் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணசாமி, பாலூட்டுதல் ஆலோசகர் பேபி ஸ்ரீ ஆகியோர் உரையாற்றினர்.தாய்ப்பால் குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள்,நடைமுறைகள் மற்றும் திட உணவுக்கு மாறும் சிறப்பம்சங்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
வினாடி வினா,வாக்குப்பதிவு உள்ளிட்ட இடைச்செயல்பாடுகளில் தாய்மார்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயனுள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
தாய்ப்பால் என்பது வாழ்நாள் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாகும். தாய்மார்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படும்போது,குழந்தையின் வளர்ச்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்,என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “தாய்ப்பால் என்பது வாழ்நாள் ஆரோக்கியத்தின் தொடக்கம். தாய்மார்களுக்கு சரியான தகவல்களை வழங்குவது மிக முக்கியம்,” என்றார்.
ராவ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் மற்றும் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை ஆலோசகர் டாக்டர் ஆஷா ராவ் ஆகியோர் கூறுகையில், குழந்தை ஆரோக்கயம் குறித்த அறிவு மற்றும் விழிப்புணரவு மூலமாக, தாய்மார்கள், தங்கள் குழந்தையின் சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்” என்றார்.
நிகழ்வில், ரோட்டரி மாவட்ட இயக்குநர் ஆர்.டி.என். சம்பத்குமார், உதவி ஆளுநர் ஆர்.டி.என். கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜி.ஜி.ஆர். ஆர்.டி.என். ஜீகடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு முடிவில், புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனை உணவகத் திறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்காக சுகாதாரத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட இந்த உணவகம், சுவையும் நலனும் ஒன்றாக இணைந்த இடமாக அமைந்தது.
முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக கேப்டீரியா வசதி துவக்கிவைக்கப்பட்டது.
விழாவில் ரோட்டரி ஆக்ருதி கிளப் தலைவர் மது கண்ணன்,பிக்கி புளோ மகளிர் அமைப்பின் கோவை தலைவர்,அபர்ணா சுங்க் மற்றும் கோயம்புத்தூர் பெண்டா லேடீஸ் சர்க்கிள்,தலைவி சி.ஆர் காதம்பரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ரோட்டரி மாவட்டத் தலைவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தாய்ப்பால் தொடர்பான ஆலோசனை பெற, 0422-4048888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.