September 7, 2018
தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கலையரத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பழைய மேசை, டேபிள் உட்பட பொருட்கள் எரிந்து சாம்பலானது.
கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் முதல் மாடியில் பழைய மேசை, டேபிள்கள் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை திடீரென அந்த கலையரங்க வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் கலையரங்க வளாகத்தில் இருந்த பழைய மேசை,டேபிள் உட்பட பொருட்கள் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விபத்து நடந்த பள்ளி வளாகத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் விபத்து குறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.