• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மேற்கு மாவட்ட தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக முப்பெரும் விழா

October 14, 2020 தண்டோரா குழு

கோவை மேற்கு மாவட்ட தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி கழகம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.

கோவை மேற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் திருவிழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வழியாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோவை மேற்கு மாவட்ட தி.மு.க.சாய்பாபா காலனி பகுதி சார்பாக சங்கனூர் சாலையில் உள்ள ஆர்.கே.திருமண மண்டபத்தில் சமூக விலகலை பின்பற்றி அனைவரும் முக கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர். 10,11,12,13,14,44 மற்றும் 45 என ஏழு வார்டுகளுக்கு உட்பட்ட சாய்பாபாகாலனி பகுதி கழக பொறுப்பாளர் கே.எம்.ரவி தலைமையில் நடைபெற்ற இதில் வார்டு செயலாளர்கள்,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள்,பகுதி கழக பொறுப்பு குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் சரவணம்பட்டி பகுதியில் கோவை மேற்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் தலைமையில் இணைய வழியாக நடைபெறும் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிக்கு அனைவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க