• Download mobile app
23 Nov 2025, SundayEdition - 3574
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் !

August 11, 2025 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் , சாய்பாபா காலனி அழகேசன் ரோடு சந்திப்பு முதல் எருக்கம்பெனி வரை மேம்பாலம் வேலை நடைபெறுவதால் 12.08.2025 ம் தேதி முதல் 90 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1.காந்திபுரம்,பூமார்க்கெட் வடகோவை மேட்டுப்பாளையம் ரோடு வழியாக செல்லும் பேருந்துகள்,சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து கனரக வாகனங்களும் வடகோவை அவினாசிலிங்கம் கல்லூரியிலிருந்து இடது புறம் திரும்பி , பாரதி பார்க் ரோடு வழியாக சென்று GCT கல்லூரி ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி,தடாகம் சாலை வழியாக , வெங்கிட்டாபுரம்,கோவில் மேடு. இடையர்பாளையம் சென்று அங்கிருந்து கவுண்டம்பாளையம் சாலையை அடைந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.

2.கவுண்டம்பாளையம் வழியாக கோவை நகருக்குள் வரும் அனைத்து இலகு ரக மற்றும் கனரக வாகனங்களும் வழக்கம் போல் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

3. காந்திபுரம்,அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் நல்லாம்பாளையம் வழியாக கணபதியை அடைந்து, காந்திபுரம் வழியாக செல்லலாம்.சங்கனூர் சந்திப்பிலிருந்தும் இடது புறம் திரும்பி,கண்ணப்ப நகர் புதுப்பாலம் வழியாக சிவானந்தா காலனியை அடைந்து காந்திபுரம் வழியாக செல்லலாம்.

5.காந்திபுரம்,சிவானந்தா காலனியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் , சரக்கு வாகனங்கள் ARC சந்திப்பில் இடது புறம் திரும்பி, கங்கா மருத்துவமனை ,அழகேசன் ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி,அழகேசன் ரோடு வழியாக தடாகம் சாலையை அடைந்து வெங்கிட்டாபுரம் , கோவில்மேடு.இடையர்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் தடாகம் சாலை வழியாக செல்லலாம்.

6.NSR ரோடு வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் உட்பட அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் NSR ரோடு எஸ்டேட் பேங்க் சந்திப்பில் வலது புறம் திரும்பி, ராஜா அண்ணாமலை ரோடு வழியாக பாரதி பார்க் ரோடு சென்று,இடது புறம் திரும்பி அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.

மேலும் படிக்க