• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு பொறுப்பேற்பு

March 6, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு மற்றும் துணை பிரதேச தளபதியாக வித்யாஸ்ரீ தர்மராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை வீரர்களில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தன்னார்வ சேவை அமைப்பாகும். தமிழகம் முழுவதும் 15,000 ஊர்க்காவல் படையினர் சேவையாற்றி வருகின்றனர். அதைபோல், ஊர்காவல் படையில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் பகுதி நேர சேவையாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சீருடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் மேட்டுப்பாளையம் அலகு, துடியலூர் அலகு, பொள்ளாச்சி அலகு என மூன்று குழுக்களை உள்ளடக்கிய ஊர்க்காவல் படையில் 387 ஊர்க்காவல் படையினர் உள்ளனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பாதுகாப்பு பணிகளிலும், கோவில் திருவிழாக்களிலும், இரவு ரோந்து பணிகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு மற்றும் துணை பிரதேச தளபதியாக வித்யாஸ்ரீ தர்மராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதன்பின் இவர்கள் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் படிக்க