• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

February 3, 2020 தண்டோரா குழு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் கந்து வட்டி பிரச்சனை காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றனர்.இதனை கண்ட பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதனை தொடர்ந்து மக்கள் குறை தீர்ப்பு நாளன்று பலத்த காவல் போடப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே மனு அளிக்க அனுமதிக்கபட்டு வந்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் மனு அளிக்க ஏராளமானோர் வந்திருந்தனர். மதியம் சுமார் 12.30 மணி அளவில் ஆட்டோவில் குழந்தைகளுடன் வந்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் அவரை விரட்டி பிடித்தனர்.உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி இருந்த நிலையில் அவர் மீது தண்ணீர் ஊற்றியும் அவரது உடலை துணியால் துடைத்த போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு பந்தைய சாலை காவல் நிலையதிற்கு அழைத்து சென்றனர்.

தந்தை தீக்குளிக்க முயன்றதை கண்ட விநோத்குமாரின் குழந்தைகள் கதறி அழுதனர்.அவர்களை பெண் காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்.இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. வியாபார நஷ்டம் காரணமாகவும் நண்பர்கள் துரோகம் செய்த காரணத்தால் மன உளச்சலால் தற்கொலை முயற்சி மேற்கொள்வதாகவும் தான் இறந்த பிறகு குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும் தன்னை புதைத்த இடத்தில் பூச்செடி நட வேண்டும்,தன்னை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேணும் இதற்கான ஆதாரங்கள் தனது செல்போனில் இருப்பதாக கடிதத்தில் இருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.வினோத்குமார் தீக்குளிக்க முயன்றதை பணியில் இருந்த 108 ஆம்புலனஸ் மருத்துவ உதவியாளர் பாலாஜி தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க