• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு

May 21, 2022 தண்டோரா குழு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கோவை மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அதன்படி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5239 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் 150 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 48,039 நபர்கள் எழுத உள்ளனர்.காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு நடத்துவதற்காக 60 மொபைல் அலுவலர்கள் 300 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வருபவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனரதமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க