• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் மொத்தம் 3050700 வாக்காளர்கள்

January 5, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் 09.11.2022 முதல் 08.12.2022
வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரனால் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்
வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும்அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பாக ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது:

இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 14,98,721 ஆண்கள் 15,51,421 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 558 ஆக மொத்தம் 3050700 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 18426 வாக்காளர் பட்டியலில் பதிவு
செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத் தொகுதிவாரியான வாக்காளர் கீழ்க்கண்டவாறு.

மேட்டுப்பாளையம் ஆண் 144395, பெண் -154862, மூன்றாம் பாலினம் -47 மொத்தம் 299304.

சூலூர் ஆண் 155091, பெண் -163204, மூன்றாம் பாலினம் -69 மொத்தம் 318364.

கவுண்டம்பாளையம்-ஆண் 227835, பெண் -229454, மூன்றாம் பாலினம் -119 மொத்தம் 457408.

கோவை வடக்கு ஆண் 166128, பெண் -164896, மூன்றாம் பாலினம் -38 மொத்தம் 331062.

தொண்டாமுத்தூர் ஆண் 161332, பெண் -165437, மூன்றாம் பாலினம் -126 மொத்தம் 326895.

கோவை தெற்கு ஆண் 121422, பெண் -122365, மூன்றாம் பாலினம் -32 மொத்தம் 243819.

சிங்காநல்லூர்- ஆண் 160400, பெண் -163536, மூன்றாம் பாலினம் -26 மொத்தம்323962.

கிணத்துக்கடவு – ஆண் 161146, பெண் -168000, மூன்றாம் பாலினம் -40 மொத்தம் 329186.

பொள்ளாச்சி -ஆண் 106805, பெண் -116471, மூன்றாம் பாலினம் -40 மொத்தம் 223316.

வால்பாறை (தனி) -ஆண் 94167, பெண் -103196, மூன்றாம் பாலினம் -21 மொத்தம் 197384.

ஆண்கள் மொத்தம் 1498721, பெண்கம் மொத்தம் 1551421, மூன்றாம் பாலிதனவர்கள் 558 என மொத்தம் 3050700 வாக்காளர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க