• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் நாளை 28 வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

April 29, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை (சனிக்கிழமை) சிறப்பு மாபெரும் கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாம் நடத்திட தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி கோவை மாவட்டத்தில் 1515 இடங்களில் தடுப்பூசிகள் வழங்கிட மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 325 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 27 லட்சத்து 78 ஆயிரத்து 885 நபர்களுக்கு முதல் தவணையும், 24 லட்சத்து 97 ஆயிரத்து 706 நபர்களுக்கு இரண்டாம் தவணையும், 15-18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 195 முதல் தவணையும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 544 இரண்டாம் தவணையும், 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 69 ஆயிரத்து 531 முதல் தவணையும், 14 ஆயிரத்து 730 இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in வழியாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க