• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு

December 31, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 8 நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீது சமூகநலத்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான
சட்டபூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுகளின் கீழ் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை
மீறிய செயலாக கருதப்படுகிறது. குழந்தை திருமனம் நடத்துபவர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு இரண்டு வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது அத்துடன் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சைல்டு லைன் மூலம் குழந்தை திருமன புகார் பெறப்பட்டதை தொடர்ந்து குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட அன்னூர் தொப்பம்பட்டியனூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார்,கோவை கே.கே. புதூரைச் சேர்ந்த விஜயபாரதி, அன்னூர் அருகே காரேகவுண்டப்பாலையத்தை சேர்ந்த விஜய், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி , பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,வால்பாறையைச் சேர்ந்த பிரேம்குமார், பொள்ளாச்சி கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்து மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சபரீஸ்வரன் ஆகிய 8 நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள்மீது சமூகநலத்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098 மற்றும் மகளிர் உதவி மைய இலவச தொலைப்பேசி எண்.181 ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க