• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர பகுதியில் ஊரடங்கு விதியை மீறுவோர்க்கு ரூபாய் 500 அபராதம் – துணை ஆணையர் பேட்டி

May 14, 2021 தண்டோரா குழு

கோவையில் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து விதியை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.தொடர்ந்து கோவை காந்திபுரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் சோதனை சாவடிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவை மாநகர பகுதியில் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து உள்ளதாகவும், ஊரடங்கு விதியை மீறுவோருக்கு ரூபாய் 500 அபராதம் விதிப்பதாகவும், முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்று அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க