• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் 123 போக்குவரத்து விதி மீறல் வழக்கு பதிவு !

May 29, 2020 தண்டோரா குழு

கோவை மாநகர் பகுதியில் ஒரே நாளில் போக்குவரத்து விதி மீறல் 123 வழக்கு பதிவு செய்யப்பட்டன.இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இதுவரை 18 ஆயிரத்து 526 வழக்குகள் பதிவானது. 21 ஆயிரத்து 146 பேர் கைது செய்யப்பட்டனர். 18,519 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறை மீறல் தொடர்பாக 82 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது. தொற்றுநோய் பரவும் வகையில் வாகனங்களை இயக்க கூடாது. முறையான அனுமதி பெற்று மாவட்டம் விட்டு மாவட்டம் வாகனங்களை இயக்க வேண்டும். வெளி மாநிலம் செல்ல முறையாக பெற்றிருக்க வேண்டும்.அனுமதியின்றி அத்துமீறி பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது குறிப்பாக நோய் பரவிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் கோவை மாவட்ட எல்லைக்குள் நுழைய கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க