• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 குழு

January 12, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 குழு
மண்டல வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

இதில் அவர் பேசியதாவது:

கோவை மாநகராட்சி எல்லைக்குள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் வீதம் மொத்தம் 5 வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர், ஐந்து குழுவாக பிரிந்து, தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

வடக்கு மண்டலத்திற்கு மீனாட்சி சுந்தரம், தெற்கு மண்டலத்திற்கு செல்வசுரபி, கிழக்கு மண்டலத்திற்கு பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மேற்கு மண்டலத்திற்கு ஷர்மிளா, மத்திய மண்டலத்திற்கு கோவிந்தராஜிலு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் தொடர்பான விபரங்கள், தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர்களின் விபரங்கள் போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவல்களை சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், காய்ச்சல் அறிகுறி கண்டறியும் முன்கள பணியாளர்கள் 500 பேர், வீடுகளுக்கே சென்று கொரோனா சிகிச்சை அளிக்கும் 5 சிறப்பு மருத்துவக்குழு மற்றும் நாள்தோறும் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் போன்றவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் பேசினார்.

கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க