• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி 71வது வார்டில் போட்டியிடும் பஞ்சாப் தமிழர் டோனி சிங்

February 4, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 71வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட பஞ்சாப் தமிழர் டோனி சிங் மனு தாக்கல் செய்தார்.

கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் 100 பதவிகள் உள்பட மொத்தம் 811 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.இந்நிலையில் இன்று கடைசி நாட்கள் என்பதால் கட்சி சார்பில் போட்டியிடும் கட்சி,மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என காலை முதலே வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 60வருடமாக கோவையில் வசித்து வரும் பஞ்சாப் தமிழர் டோனி சிங் என்பவர் கோவை மாநகராட்சி ஆர். எஸ். புரம் பகுதியில் சுயேட்சையாக 71வது வார்டில் போட்டியிடுவதற்கு மேற்கு மண்டல தேர்தல் அலுவலகத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சேவைகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் படிக்க