• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி

February 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் இளம்பெண் திமுக வேட்பாளர் நிவேதா மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. 97வது வார்டில் இளம்பெண் திமுக வேட்பாளர் 22 வயதான நிவேதா போட்டியிட்டார். இவர் திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார்.

கோவை மாநகராட்சி முதல் முறையாக பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டதால் மேயர் வேட்பாளராக கருதப்படுகிறார். இவர் போட்டியிட்ட 97வது வார்டில் மொத்தம் 11,797 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில், நிவேதா 8,925 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உட்பட 17 பேரும் டெபாசிட் கூட பெற முடியாமல் பரிதாபமாக தோல்வியை தழுவினர்.

அதிமுக வேட்பாளர் சகஸ்ரநாமம் 1139 வாக்குகள் மட்டுமே பெற்று 7,786 வாக்கு வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். கோவை மாநகராட்சி வார்டுகளிலே மிகப்பெரிய வாக்கு வித்யாசத்தில் திமுக இளம்பெண் வேட்பாளர் நிவேதா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க