• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்றா?

January 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு காய்ச்சல் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டனர்

கோவையில் கொரோனா தொற்று 3-வது அலை, பரவல் வேகமாக இருந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் குறைவாக இருந்த பாதிப்பு நேற்றைய தினம், 11 ஆயிரத்து, 594 என அதிகரித்து உள்ளது. ஒரு நாள் பாதிப்பு 2,000த்தை கடந்து விட்டது. சளி மாதிரி சேகரித்து பரிசோதித்தால் 20 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது.

நேற்று முன்தினம் 9,550 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்ததில் 2042 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா சிகிச்சை முகாமில் 230 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 120 தெருக்களில் 4 பேருக்கும் மேலான நோயாளிகள் இருக்கின்றனர்.
மாநகராட்சி பகுதியில் மண்டலத்தில் 1200 பேர் வீதம், நாளொன்றுக்கு 6000 சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதில், 15 சதவீதத்தினருக்கு தொற்று உறுதியாகிறது.

இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் மற்றும் சுகாதார அலுவலர் சதீஸ்குமார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று என சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. ஆனால் சுகாதார அலுவலர் சதீஸ் தனக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவித்தார். மேலும் அவர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிக்கும் வந்துவிட்டார்.

ஆனால் மாநகராட்சி கமிஷனருக்கு காய்ச்சல் மற்றும் சளி சொந்தரவு இருந்த காரணத்தால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
மாநகராட்சி கமிஷனருக்கு கொரோனா என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க