• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோர் கைது

June 19, 2019 தண்டோரா குழு

குடிநீர் பிரச்சனையை சீர் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோடை காலம் முடிவடைந்த நிலையிலும், கோவை மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் கடமையான சிரமத்திற்கு உள்ளாகி வருவதை கண்டித்து இன்று திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகின்றது என்றும், கடந்த வருடம் மழை அதிகம் பெய்த நிலையில் நீரை சேமிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். கடந்த 8 ஆண்டு காலமாக குடிநீர் மேலாண்மை பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறையாக செய்யவில்லை எனவும், குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் கோவை மாநகர குடிநீர் விநியோகம் செய்ய சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஓப்பந்தத்தினை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். காவல்துறயின் தடையை மீறி,குடிநீர் பிரச்சனையை சீர் செய்ய வலியுறுத்தின் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 800 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க