• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் போது குண்டு வெடிப்பு நினைவுச்சின்னம் அமைக்கப்படும்- அண்ணாமலை

February 15, 2022 தண்டோரா குழு

மக்களின் கேள்விகளுக்கு பயந்தே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பிரச்சாரம் செய்வதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு 24 ஆம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பாரத மாதா திருவுருவப் படத்துடன், அமைக்கப்பட்டிருந்த குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் மேடையில் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் வெல்லும் போது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இதே பகுதியில் நினைவுத்தூண் வைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது,

இந்து என்பது வாழ்வியல் முறை எனவும், பிற சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சிலர் இந்து மதத்தை தவறாக சித்தரிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் கோவில்கள் இடிக்கப்படும் நிலை உள்ளதாக கூறிய அவர், கடந்த 8 மாத கால திமுக அரசு அனைத்து மதங்களுக்குமான அரசாக இல்லை என தெரிவித்தார். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தமிழக அரசு முழு பலத்தையும் பயன்படுத்தி மறைக்க முயற்சிப்பதாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஹிஜாப் விவகாரத்தை உழைத்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அரசியல் நடைபெறுகிறது எனவும் அவர் கூறினார்.

குடியரசு தின ஊர்தி விவகாரத்தில் பாரதியார் வேலுநாச்சியார் மற்றும் கட்டபொம்மன் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை முதலமைச்சர் ஸ்டாலின் உச்சரித்தது திமுகவில் இருந்து வந்துள்ள மாற்றம் எனவும், முதலமைச்சர் சொன்னதுபோல மக்கள் இருக்கும் இடங்களுக்கு ஊர்தி வரவில்லை எனவும் கூறிய அண்ணாமலை, கோவை மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் போது குண்டு வெடிப்பு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க