• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் தீ விபத்து

May 18, 2022 தண்டோரா குழு

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உள்ளே இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கோவைப்புதூர் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின் கசிவு தீவிபத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க