• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி !- குறைந்த விலையில் முழுஉடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்

April 5, 2024 தண்டோரா குழு

உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதிகொண்டாடப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை பழக்கங்களாலும், கால சூழல்களாலும் உலகெங்கிலும் கோடி கணக்கான மக்களின் உடல்ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. இதை முன்னிலைப்படுத்த, உலக சுகாதார அமைப்பு2024 உலக சுகாதார தினத்தின் கருப்பொருள்‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ என்ற கருப்பொருளை முன்னெடுத்துள்ளது.

எல்லா இடங்களிலும் அனைவருக்கும்தரமான சுகாதார சேவைகளை பெறுவதற்கான உரிமையை பெறுவதற்காக இந்த ஆண்டுக்கான கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டது.கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினம் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டாக்டர். ஆதித்யன் குகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2 முழு உடல் பரிசோதனை திட்டங்களின் பெறப்படும் நன்மைகள் பற்றி விளக்கினார்.

ஏ ஜி எஸ் ஹெல்த்கேர் & மாஸ்டர் ஹெல்த் செக்அப் மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர்.ஆதித்யன் குகன் கூறுகையில்,

“ஒருமருத்துவராகவும், தனி மனிதனாகவும், ‘சிகிச்சையை விட வருவதற்கு முன் தடுப்பதே சிறந்தது’ என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, AGs ஹெல்த்கேர் உருவானது முதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முதன்மையான சுகாதாரப் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதில் நான் முழுமையாக கவனம்செலுத்தி வருகிறேன்.முதல் பரிசோதனை திட்டமானது இரத்தம், சிறுநீர், இமேஜிங்மற்றும் பல ஆலோசனைகளுடன் கூடியஇந்தியாவின் மிகவும் மலிவு விலையில்தலை முதல் கால் வரைவிரிவான முழு உடல் பரிசோதனையை இங்கே நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.

ரூ. 6000 மதிப்புள்ள இந்த பரிசோதனைகள் அனைத்தும் 76வது உலக சுகாதாரதினத்தை முன்னிட்டு ரூ. 600/- க்கு முழு உடல்பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் முதல் 50 பதிவுகளுக்குஇலவச மல்டி வைட்டமின் / புரோட்டீன் சாச்செட்டுகள் கூடுதலாக வழங்கப்படும். இந்தசலுகை விலை பரிசோதனை திட்டமானது ஏப்ரல் 7முதல் 13 வரை செல்லுபடியாகும்,என்றார்.

இரண்டாவது திட்டம் ஒரு வருடத்திற்கான நீண்டகாலத் திட்டமாகும், இது குழு முன்பதிவுகள் (Bulk booking), அடுக்குமாடிகுடியிருப்புகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மிகவும் மலிவு விலையில் \ தலை முதல் கால் வரைமுழு உடல் பரிசோதனை திட்டமாகும். ஒரே நேரத்தில் 10 பேருக்கு மேல் முன்பதிவு செய்தால் ரூ.7,500 மதிப்புள்ள இந்தபரிசோதனை ரூ. 3750 க்கு பெறமுடியும்.உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்த முன்முயற்சியானது முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே ஆகும்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச ஹோம் டெலிவரியுடன் உள்ள மருந்தகமான 63 டிரக்மார்ட் பார்மசியில் இருந்து வாங்கப்படும் மருந்துகளுக்கு 15% தள்ளுபடியும், மற்ற ஆய்வக சோதனைகள் மற்றும் இமேஜிங்கில் 50% தள்ளுபடியும் வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.

இரண்டு பேக்கேஜ்கள் பற்றிய மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்+919626055556.

மேலும் படிக்க