• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மகளிர் நீதிமன்றத்தில் கையில் கத்தியை வைத்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர்

August 9, 2023 தண்டோரா குழு

கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்குக்காக வந்த நபர் ஒருவர் திடீரென கையில் கத்தியை வைத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.இவர் மீது கடந்த 2021 ம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் விதிக்கப்பட்ட நிலையில்,இன்று மனைவியுடன் நீதிமன்றம் வந்தார். நீதிமன்றத்தில் இவரை கைது செய்ய போலீசார் இருந்ததால்,ஆவேசமடைந்த பஷீர் சிறைக்கு போகமாட்டேன் என கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மனைவி பிரியாவின் கைப்பையில் இருந்த சிறிய கத்தியை தூக்கிக்கொண்டு ரகளையில் ஈடுபட்டார்.இதனையடுத்து காவல் துறையினர் அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து செல்வபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் பஷீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மேலும் படிக்க