• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போலுவாம்பட்டியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

February 23, 2019 தண்டோரா குழு

கோவை போலுவாம்பட்டி காப்புக்காட்டில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

கோவையில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை இன்று வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது.

கோவையை அடுத்த பெருமாள் கோவில் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் சிறுத்தை ஓன்று பண்ணைகளில் புகுந்து ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்து சாப்பிட்டு வந்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். ஜன.19ல் ஆடு மற்றும் கோழிகளை கொன்றதால் சிறுத்தையை பிடிக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதை அறிந்து வனத்துறையினர் அப்பகுதியில் 25 நாட்களுக்கு முன் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டை வைத்துள்ளனர். இதில் இன்று அதிகாலை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 6 வயது ஆண் சிறுத்தை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது.பிடிபட்ட சிறுத்தை தெங்குமரஹாடா கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் படிக்க