• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம் -திரளாக பக்தர்கள் பங்கேற்பு !

March 15, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்ட விழா கடந்த 09-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேர்நிலைத் திடலில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிள் உள்ளிட்டோர் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கிழக்கு வீதியில் உள்ள திடலுக்கு வந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க