• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக உடலுறுப்பு தான தினம் அனுசரிப்பு

August 13, 2020 தண்டோரா குழு

ஒவ்வொரு ஆண்டும் உலக உடலுறுப்பு தினமானது ஆகஸ்ட் 13ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் இந்த ஆண்டும் உலக உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்பட்டது.

பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் J.S. புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது இதற்கு முன்னர் உறுப்பு தானம் வழங்கிய கொடையாளர்களின் உறவினர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இது குறித்து J.S. புவனேஸ்வரன்
கூறியதாவது:

பி எஸ் ஜி மருத்துவமனையானது உடலுறுப்பு தான அறுவை சிகிச்சைக்கு அரசால், சிறப்பு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையாகும். இங்கு 50க்கும் மேற்பட்ட உடலுறுப்பு தான அறுவை சிகிச்சை நடைபெற்று பல்வேறு நோயாளிகளுக்கும் தானமாக பெற்ற உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு அவர்கள் நம் கண் முன்னே இன்னும் நடமாடிக் கொண்டிருப்பதை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கொரோனா காலத்தில் கூட இதில் தொய்வு ஏற்படாமல் இந்த உடல் உறுப்பு தானம் நடைபெற தமிழக அரசும் இந்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே இந்த கால கட்டத்தில் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை நாம் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த வாரம் கூட பி எஸ் ஜி மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இரத்த தானம், கண் தானம் பற்றி மட்டுமே நாம் அனைவரும் பெரும்பாலும் அறிந்திருப்போம் ஆனால் சமகாலத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு என்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இரத்ததானம் கண்தானம் ஆகியவற்றுக்குப் பிறகு நாம் சிறுநீரகத்தையே அதிகமாக தானமாகப் பெறப்பட்டதை அறிந்திருப்போம். அதுவும் நமது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே.! ஆனால் நிகழ்காலத்தில் சிறுநீரகம் மட்டுமல்லாது கல்லீரல், நுரையீரல், இருதயம், கணையம், சிறுகுடல், தோல், எலும்பு இவ்வாறு உடலின் பல பாகங்களை நான் தானமாகப் பெறுவதற்கு இந்த உடல் உறுப்பு தானமானது முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடையே ஒரு வாசகத்தை உச்சரிப்பதை நாம் கேட்டிருப்போம்.
“மண் திங்கப்போகும் உடல் தானே”, “இதனால் என்ன பயன்” என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் நிகழ்காலத்தில் அது முற்றிலும் மாறுபட்டுள்ளது. இறந்து போன உடலின் மூலமும் பல உயிர்களை வாழவைக்க முடியும் என்பதை உடலுறுப்பு தானம் மூலமாக தற்போது நாம் அனைவரும் புரிந்துக் கொண்டிருப்போம்.மண்ணோடு மண்ணாகிப் போகவேண்டிய பலரது உடல் உறுப்புகள் இன்று நம்மிடையே வாழும் மக்களோடு மக்களாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.70, 80 ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்து முதுமையினால் ஏற்படும் மரணம் வருவது என்பது வேறு.ஆனால் இளமையிலும், நடுத்தர வயதிலும் நோய்வாய்ப்பட்டு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், போன்ற உடல் உறுப்புகள் பலவீனமடைந்து அதனால் ஏற்படும் மரணங்கள் பலரது வாழ்வில் மாறாத ரணமாக உள்ளது. இந்த இறப்பு விகிதத்தை உடலுறுப்பு தானமானது குறைத்துள்ளது.இளம் வயதிலும் நடுத்தர வயதிலும் முடிந்து போகவேண்டிய பலரது வாழ்வில் ஒளியேற்றி மீண்டும் அவர்கள் புது வாழ்வை துவங்குவதற்கு இந்த இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையானது பெரும் பங்கு வகிக்கிறது.

ஒரு நோயாளி உயிர் போகும் நிலையில் இருந்தும் கூட அவரது உறவினர்கள் மற்றவர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உடல் உறுப்பு தானம் பற்றி மருத்துவரிடம் கூறி தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானமாக அளிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.எந்த பிரதிபலனையும் பாராமல் அவர்கள் செய்யும் இது போன்ற செயல்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும், வாழ்ந்த பின்பும் போற்றுதலுக்குரிய ஒரு காரியமாகும்.உடல் உறுப்புகளை இப்படி தானமாக அளிப்பதன் மூலமாக நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இறந்த பின்பும் கூட, மற்றவர்கள் மூலமாக இவ்வுலகில் உயிர் வாழ்வதை நம் கண்முன்னே காணமுடிகிறது.

மருத்துவர்களால் மட்டும் தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று கூறுவார்கள். ஆனால் மருத்துவம் படிக்காதவர்கள் நினைத்தால் கூட, ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டு உயிர்கள் வரை காப்பாற்ற முடியும்.நாம் செய்யும் உடல் உறுப்பு தானத்தின் மூலமாக ஒரு உடல், 8 உயிரை காப்பாற்றுவதற்கு பெரும் வரப்பிரசாதமாக இந்த உடல் உறுப்பு தானம் விளங்குகிறது.
நான் துவக்கத்தில் கூறியதுபோல, “மண் திங்கப்போகும் உடல் தானே, இதனால் என்ன பயன்” என்று நாம் இனியும் சொல்லிக்
கொண்டிருக்கக்கூடாது. மண் திங்கப் போகும் உடல் என்று நாம் நினைக்காமல் என்னுடைய உடலாலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும்

நாம் செய்யும் உடல் உறுப்பு தானத்தின் மூலமாக ஒரு உடல், 8 உயிரை காப்பாற்றுவதற்கு பெரும் வரப்பிரசாதமாக இந்த உடல் உறுப்பு தானம் விளங்குகிறது.
நான் துவக்கத்தில் கூறியதுபோல, “மண் திங்கப்போகும் உடல் தானே, இதனால் என்ன பயன்” என்று நாம் இனியும் சொல்லிக்
கொண்டிருக்கக்கூடாது. மண் திங்கப் போகும் உடல் என்று நாம் நினைக்காமல் என்னுடைய உடலாலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்துடன் நாமும் நமது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வரவேண்டும். மற்றவர்களுக்கும் இதைப் பற்றி எடுத்துரைத்து அவர்களையும் நாம் இது போன்ற செயலில் ஈடுபட வைக்க முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும்.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் அனைவருக்கும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே உடல் உறுப்பு தானம் பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க