• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நிகழ்ச்சி

December 6, 2022 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் பாடல்களை கல்லூரி மாணவ,மாணவியர் இணைந்து பாடினர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஆலயங்களிலும்,வீடுகளிலும் கிறிஸ்தவர்கள் ஏசு கிறிஸ்துவின் சிறப்புகளை கூறும் கேரல் பாடல்களை பாடி மகிழ்வது வழக்கம்.இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக கல்லூரி மாணவ, மாணவியர்களின் கேரல் பாடல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சி.எஸ்.ஐ.கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கல்லூரியின் செயலர் ஆயர் டேவிட் பர்னாபஸ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக பேராயரம்மா ஆனி ரவிந்திர், திருமண்டல செயலாளர் ஆயர் பிரின்ஸ் கால்வின்,கோவை வட்டகை தலைவர் ஆயர் ரிச்சர்ட் ஜெயகுமார், சி.எஸ்.ஐ.மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி குளோரி லதா டேவிட்,கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன்,சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைபள்ளி முதல்வர் திருமதி மெர்சி மெட்டில்டா, எஸ் டி சி தாளாளர் தேவராஜ் சாமுவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ,மாணவிகள் இணைந்து ஏசு கிறிஸ்துவின் சிறப்புகளை கூறும் கேரல் பாடல்களை இணைந்து பாடினர்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க