• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி

October 12, 2021 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறை மற்றும் தேசிய சேவை திட்டம் சார்பாக இளைஞரின் எழுச்சி நாளையொட்டி மாவட்ட அளவிலான பாரத ரத்னா APJ அப்துல்கலாம் பேட்மிண்டன் ரோலிங் ட்ராபி போட்டிகள் நடைபெற்றது.இதில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் மாணவர்களுடன் பேட்மிண்டன் விளையாடி துவக்கி வைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 128 அணிகளாக வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் 18வயதுக்கு உட்பட்டவர்கள்,40வயதிற்கு மேற்பட்டவர்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு, போட்டியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் மற்றும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் உடற்கல்வி துறை தலைவர் மற்றும் பதிவாளர் முனைவர் முருகவேல்,துணை வேந்தர், பேராசிரியர் ஆகியோர் மாணவர்களுக்கு மூலிகை முக கவசங்களை வழங்கினர்.இதில் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை உட்பட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க