September 14, 2018
தண்டோரா குழு
கோவை பாப்பீஸ் ஹோட்டலில் “லக்னோவி உணவுத் திருவிழா” இன்று துவங்கியது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் எதிரில் அமைந்துள்ள பாப்பீஸ் ஹோட்டலில் லக்னோவி உணவுத் திருவிழா இன்று துவங்கியது.பத்து நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் நவாப் மற்றும் முகலாயக் காலத்துக்கு இட்டு செல்லும் வகையில் முகலாய முறைப்படி, மசாலாக்கள் சேர்த்து சமைக்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், மூர் மெதி பாலக், கோஷ்ட் டும் புலாவோ, சுப்ஸ் தும், ஜாஃப்ரானி கோஷ்ட் பூலா ஆகிய உணவுகள் சிறந்த முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பரிமாறப்பட உள்ளன.
இதுகுறித்து பாப்பீஸ் ஹோட்டல் மேலாளர் (செயல்பாடு) ஜெயராமன் கூறுகையில்,
இந்த லக்னோவி உணவுத் திருவிழாவில் – ஜஷோர்பா கோஷட் யக்னி, முர்க் பாட்லி ஷோர்பா, சப்ஜியோ கா அர்க், டால் கே யக்னி ஆகிய சைவ மற்றும் அசைவ வகை உணவுகள் இங்கு பரிமாறப்பட உள்ளன. இதைத் தவிர, தமடர்கெ மாச்லி, மூர் டிக்கா மிர்ஸா ஹஸ்னு, பன்னீர் குடமாசலா டிக்கா ஆகிய உணவுகளும் விழாவை சிறப்பிக்க உள்ளன. மேலும், உணவுகளை உடனே தயாரித்து சூடாக வழங்கும் லைவ் கவுன்டர்களும் விழாவில் இடம்பெற்றுள்ளன. அதைப்போல் அரசர்கள் காலத்தில் எப்படி உணவுகள் சுவையுடனும், நறுமணத்துடனும் பரிமாறப்பட்டதோ, அதே போல இவ் விழாவிலும் உணவு பரிமாறப்பட உள்ளன. உண்மையான லக்னோ உணவுகளின் சுவையும், நறுமணமும் மாறாமல் உணவுகள் எங்கள் பப்பிஸ் ஹோட்டல் தலைமை சமையல் கலைஞர் ராஜாவின் மேற்பார்வையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும் என்றார்.
மேலும், 23-ம் தேதி வரை நடைபெற உள்ள லக்னோ உணவு திருவிழாவில் முன்பதிவு செய்ய 9566501999 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த லக்னோ உணவுப் பொருள்கள் ஹோட்டலில் மதியம் 12.30 முதல் 3.00 மணி வரையும், மாலை 7.30 முதல் இரவு 11 மணி வரையும் ஹோட்டல் பிளானட் பார்பெக்யூ வளாகத்தில் கிடைக்கும். இந்த உணவு திருவிழாவில் மொத்தம் 90 வகை உணவுகள் பரிமாறப்பட உள்ளன. இதற்கு கட்டணமாக மதிய உணவுக்கு ரூபாய்.777.00 வைசம் மற்றும் 888.00 அசைவம், இரவு டின்னர் கட்டணமாக 888.00 சைவம் மற்றும் 999.00 அசைவம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். உணவு பரிமாறப்படும் நேரத்தில் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமான இடைஇடையே நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.