February 1, 2026
தண்டோரா குழு
குழந்தைகளின் ஆர்வத்தையும் கற்றல் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கிலும் அறிவு, ஒழுக்கம், உணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் நோக்கிலும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் 2019 ஆண்டு வரதராஜபுரத்தில் துவங்கப்பட்டது.
தற்போது 120 குழந்தைகளுடன்
செயல்பட்டு வரும் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் நிறுவனத்தின் இரண்டாவது கிளை கோவை நேரு நகர் வெஸ்ட்
ஜி.கே.டி நகரில் இன்று திறக்கப்பட்டது.
திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த மிடாஸ் டச் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிறுவனரும் கோயம்புத்தூர் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க தலைவரும் பாஜக கல்விப் பிரிவு மாநில செயலாளருமான சர்மிலா ராம் ஆனந்த் புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில்,
குழந்தைகளின் ஆரம்பக் கல்வி வாழ்க்கையில் ப்ரீஸ்கூல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 5 வயதில் குழந்தைக்கு எந்த மாதிரி கல்வியை கொடுக்கின்றோமோ அது தான் வாழ்க்கைக்கு முக்கியம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை கல்வியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.தற்போதைய சூழலில் ஏ.ஐயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏ.ஐ.தான் இன்று மனிதர்களை கட்டுப்படுத்துகிறது.
விளையாட்டு மற்றும் அனுபவ அடிப்படையிலான கற்றல் முறைகள் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவுகின்றன.மேலும்,வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் மேற்கொள்ளும் கல்வி அணுகுமுறை பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.
வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் கூறுகையில்,
இளம் வயதிலிருந்தே குழந்தைகளின் ஆர்வத்தை வளர்த்து,எதிர்காலத்திற்கு தயாரான தன்மையை உருவாக்குவதே வைட் மைண்ட்ஸ் முன்பள்ளியின் முக்கிய நோக்கமாகும். அதற்கு ஏற்ப மைண்ட்ஸ் ப்ரீஸ்கூலில் குழுப்பணி மற்றும் ஒத்துழைப்பு,விளையாட்டு மற்றும் கண்டறிதல் அடிப்படையிலான கற்றல், நெறிமுறைகள், தனித்தன்மை வளர்ச்சி, மரியாதை மற்றும் நடத்தை,உணர்ச்சி வளர்ச்சி ஆகியவை முக்கிய அம்சங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.
மேலும்,நிறங்கள்,வடிவங்கள்,எழுத்துகள், எண்கள் குறித்த அடிப்படை அறிவு, இயற்கையுடன் உறவாடும் பழக்கம், கலை, இசை,தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சனைத் தீர்வு திறன் ஆகியவை குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
விளையாட்டு வழிக்கற்றல் மற்றும் அனுபவ அடிப்படையிலான கல்வி முறையின் மூலம், குழந்தைகளின் ஆர்வம், சுயநம்பிக்கை மற்றும் சமூகத் திறன்கள் மேம்படும் வகையில் வைட் மைண்ட்ஸ் ப்ரீஸ்கூல் செயல்பட்டு வருகிறது.வரும் ஆண்டிலேயே கோவையில் 10 கிளையை துவங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.இந்த புதிய கிளை மூலம், கோயம்புத்தூர் பகுதியில் முன்பள்ளி கல்வி மேலும் வலுப்பெறும் என பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.