• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் 6 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி

June 26, 2020 தண்டோரா குழு

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் 6 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி – சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட தென்றல் நகரில் நேற்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த 2 கொள்ளையர்கள் அங்கு பூட்டி இருந்த 6 வீடுகளின் கதவுகளை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு தென்றல் நகரில் 3 வீதிகள் உள்ளன. இந்த பகுதியில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். அதில் சில பேர் கெஸ்ட் வீடாக வைத்துவிட்டு ஊட்டியில் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோவையில் இருந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு பலபேர் வீட்டை பூட்டிவிட்டு ஊட்டிக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் புகுந்த 2 கொள்ளையர்கள் தென்றல் நகர் 3-வது வீதியில் சுகாதாரத்துறையில் வேலை பார்க்கும் முரளிதரன் குடும்பத்தினர் ஊட்டிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து துணிமணிகளை களைத்து பார்த்துவிட்டு சென்றனர். தொடர்ந்து தென்றல் நகர் 1-வது வீதியில் உள்ள ஊட்டியில் விவசாயம் பார்க்கும் லிங்கராஜ் குடும்பத்தினர்,ஊட்டியை சேர்ந்த சுகுமாரன் குடும்பத்தினர்,அதேபோல நாகர்கோவிலை சேர்ந்த முருகேஷன் குடும்பத்தினர்,நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கோபிகண்ணன் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் வீடுகளில் கடப்பாறை கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து துணிமணிகளை களைத்து பார்த்துள்ளனர். எந்த வீட்டிலும் எதுவும் கிடைக்கவில்லை. அதே தென்றல் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ.500 பணத்தை கொள்ளையர்கள் திருடியுள்ளனர். அதற்குள் இந்த தகவல் பரவி அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் பரவியது அவர்களை பிடிக்க முயன்ற போது திருடர்கள் அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்து தப்பி விட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் கையில் அருவாளுடன் சுற்றி வருவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஒரே பகுதியில் 6 வீடுகளில் திருட முயற்சி நடைபெற்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க