• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை துடியலூரில் நடைபெற்ற கண் பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி

March 11, 2024 தண்டோரா குழு

கண் பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி கோவை துடியலூரில் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு அணியுடன் கேரளா அணி மோதியது.டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த கேரளா அணியினர் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தனர்.இந்த அணி சார்பாக விளையாடிய ஜான்ஷீலா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

தமிழ்நாடு அணி சார்பாக பந்து வீசிய அம்மு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.இதனைத் தொடர்ந்து பேடிங் செய்த தமிழ்நாடு அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்து தோழ்வியடைந்தது. சிபிஇ பிட்ச் பர்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பாக நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்ற கேரள அணிக்கு ரொக்கப்பரிசு ரூ.25 ஆயிரமும், தமிழ்நாடு அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க