• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கல்லூரியில் ஷேத்ரா கலைத்திருவிழா

February 22, 2018 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் அடுத்த ஜெயேந்திர சரஸ்வதி மஹா  வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழாவை  கல்லூரியின் செயலாளர் தனலட்சுமி ஜெயச்சந்திரன் குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் பிரேமலதா வரவேற்புரையாற்றினார்.அப்போது பேசிய கல்லூரியின் செயலாளர், மாணவ சமுதாயம் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த இது சிறந்த ஒரு களம் என்றார்.

இந்த கலைத் திருவிழாவில் தகவமைப்பு தாளங்கள், பல்வேறு பொழுதுபோக்கு தனிநபர் நடனம், குழுநடனம், பேஷன் அணிவகுப்பு, மருதாணி அலங்காரம், ஒரு நிமிடம் சமையல் கலை, விளம்பரக்கலை, தேவையற்ற பொருட்களிலிருந்து கலைநயமிக்க பொருட்கள் தயாரித்தல்  போன்ற போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் காண்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது.

இவ்விழாவில் தமிழகமெங்குமிருந்து சுமார் 30 கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.மேலும்,இந்த கலைத்திருவிழாவிற்கு  சின்னத்திரை நடிகர் கதிர் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் “கலக்கபோவது யாரு சீசன்- 5 ன்” வெற்றியாளர் முகமது குரோசி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

மேலும் படிக்க