• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் நவராத்திரி இசைவிழா கொண்டாட்டம்

October 17, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜிஆர்ஜி கல்விக் குழுமத்தின் சார்பாக நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜிஆர்ஜி மெலோடீஸ் என்ற இசைக் கச்சேரியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டு விழா இசை கச்சேரி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கென தனிப்பாடலும் , குழுப்பாடல்களை மேடையில் பாடி அசத்தினர். கர்நாடக இசையை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் நமது பண்பாட்டையும் , கலாச்சாரத்தையும் வளர்க்கும் விதமாக ஜிஆர்ஜி நிறுவனங்களில் கொலு வைத்தனர்.

மேலும் 75 வது சுதந்திர தின வருடத்தை மையமாக வைத்து கொலு அமைந்தது.மேலும் , இது போன்ற விழாக்களை ஆண்டு தோறும் நிகழ்த்தி இசைக்கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அரங்கேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தும்,அவர்களை ஊக்குவித்து வருவதாக ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் நந்தினி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க