• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு முதல் பரிசாக மாருதி கார் பரிசு !

February 18, 2021 தண்டோரா குழு

கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் கோவை ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற 21 ம் தேதி நடைபெற உள்ளது.பொதுமக்கள் பாதுகாப்புடன் அமர்ந்து போட்டியை கண்டு களிக்க அரங்கம் தயார் நிலையில் உள்ளது. நாளை பணிகள் நிறைவடையும் வீரர்களின் பாதுகாப்புக்காக கே எம் சி எச் நவீன தற்காலிக மருத்துவமனை மைதானம் அருகிலேயே அமைக்கப்பட உள்ளது. வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் மாடுகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும் அவர்களது செயல்பாட்டுக்கு தகுந்தபடி பரிசுகள் வழங்கப்படும் பார்வையாளர்கள் 12 ஆயிரம் பேர் ஒரு முறை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் மாற்றப்படுவார்கள் 720 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.1000 காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளது. மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும் பார்வையாளர்களும் சமூக இடைவெளி விட்டு தான் அமர வேண்டும். சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு முதல் பரிசாக மாருதி கார் பரிசாக வழங்கப்படும். கோவையிலிருந்து கடந்த ஆண்டு 250 காளைகள் போட்டியில் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு 350 காளைகள் பங்கு பெறும். உள்ளூர் காளைகளுக்கு முதலிடம் வழங்கப்படும்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள் சிசிடிவி கேமராக்கள் மூலம் முக்கிய இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு இருக்கும்.இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை அனைவரும் கண்டு களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசிடம் கோரிக்கை வைப்போம்.

இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க