• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை-சேலம் ரயில் இன்று முதல் பிப். 28ம் தேதி வரை ரத்து

February 1, 2023 தண்டோரா குழு

கோவை – திருப்பூர் இடையே இருகூர் – சூலூர் சாலை ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை – சேலம் ரயில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 1ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவை – சேலம் மெமு ரயில், சேலம் – கோவை மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சிராப்பள்ளி – பாலக்காடு ரயில் பிப்ரவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். பிலாஸ்பூர் – எர்ணாகுளம் வாராந்திர ரயில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை இரண்டரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

அதேபோல், நண்டேடு – எர்ணாகுளம் வாராந்திர ரயில் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க