• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமி கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட சந்தோஷின் அதிர்ச்சி வாக்குமூலம்

March 31, 2019

கோவை பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 25-ம் ஆம் தேதி காணாமல் போனநிலையில் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை கையாளும் தனிப்படை போலீசார், கடந்த 6 நாட்களில், பலரிடம் விசாரணை கொண்டனர். எனினும் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். இதற்கிடையில், சிறுமி கொலை வழக்கில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தொண்டாமுத்தூரை சேர்ந்த 34 வயதான சந்தோஷ் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சிறுமியின் வீடு அருகே உள்ள தமது பாட்டில் வசித்து வந்துள்ளார்.

சந்தோஷ் குமார் கொடுத்த வாக்குமூலம்

சம்பவம் நடந்த அன்று மாலை தனது பாட்டி வீட்டில் இருந்த சந்தோஷ்குமார் வீட்டின் அருகே விளையாட வந்த சிறுமியை பிடித்து இழுத்துள்ளார். அப்போது கீழே விழுந்த சிறுமியின் நெற்றி மற்றும் தாடையில் அடிபட்டுள்ளது.பின்னர் சிறுமியை பலாத்காரம்

செய்துள்ளார். அப்போது சிறுமி மயக்கமடைந்ததாகவும் மீண்டும் மயக்கம் தெளிந்தவுடன் வாயை பொற்றி பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கியபோது சிறுமி இறந்துள்ளார். பின்னர் சிறுமியை தேடி போலீஸார் வரும் தகவலை அறிந்து டீ சர்ட்டில் மறைத்து வைத்து போலீசார் அப்பகுதியை விட்டு நகர்ந்தவுடன் அங்கிருந்த ஒரு இடத்தில் குழந்தையின் உடலை போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,இவர் ஏற்கனவே சிறுமியை இருமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, சிறுமி காணாமல் போன இரவு சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடலை பாட்டியின் வீட்டில் தான் சந்தோஷ்குமார் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாட்டியையும் அவர் கொலை செய்துள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

சந்தோஷ் அடிக்கடி தனது பாட்டிக்கு உணவு வழங்கு வதற்காக இங்கே வருவார். அப்போது குழந்தைகள் அங்கே விளையாடுவதை பார்த்துக் கொண்டே செல்வார். ஆனால், அவர் இப்படி செய்வார் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.இது எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. அவனை தூக்கில் போட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் சந்தோஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் படிக்க