• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொடிசியா அருகே இரு சக்கர வாகனத்தை தூக்கி வீசி அதி வேகமாக சென்ற கார் !

February 21, 2019 தண்டோரா குழு

கோவை பீளமேடு அருகே உள்ள கொடீசியா சாலையில் அதிவேகமாகமாக காரை ஓட்டி வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது.இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி மொத்தம் 4க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் 5 கல்லூரிகளும் உள்ளது. அதேபோல நீண்ட சாலையான இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும் ,கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டிவருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால் இந்த கொடிசியா வளாகத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று முக்கு சாலையில் தினமும் இரண்டுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல ஜென்னி கிளப் சாலை துவக்கப்பட்ட இடத்திலிருந்து கொடிசியா வரை இறக்கமான பகுதி என்பதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 4;42 மணியளவில் TN 38 AJ 1383, என்ற சொகுசு காரும் மற்றொரு சொகுசு காரும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது இஸ்கான் கோயில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் வாகனத்தை வளைக்கும் பொழுது விதியை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சொகுசு காரை ஓட்டி வந்தவர் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அதேபோல காரை ஓட்டி வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் மீண்டும் அதிவேகமாக சென்றனர்.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் அதிவேகமாக சென்ற காரை துரத்தி பிடிக்க முற்பட்டனர். ஆனால் கார் சென்ற வேகத்திற்கு பிடிக்க முடியவில்லை. பின்னர் தகவலறிந்து வந்த பீளமேடு போக்குவரத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் கண்டிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளாக தான் இருக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய காரில் பிளேக் டிண்ட் ஒட்டியுள்ளதால் காரை ஓட்டி வந்தவர் ஆணா பெண்ணா என்பதும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க