• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ஒருவர் அடித்து கொலை – 12 பேர் கைது !

May 29, 2024 தண்டோரா குழு

கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா.இவர் அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்குள் புகுந்து நேற்று முன்தினம் இரும்பு கம்பிகளைத் திருட முயன்றதாக தெரிகிறது.

இதனிடையே மருத்துவமனை காவலாளிகள் ராஜாவை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.தாக்குதலில் ராஜா மயங்கி விழுந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த காவலாளிகள் அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து,மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் பலனின்றி மணி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே,மருத்துவமனையின் துணைத் தலைவர் நாராயணன்,செக்யூரிட்டி, ஊழியர்கள் உட்பட 12 பேரை கைது செய்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க