July 21, 2017
தண்டோரா குழு
கோவையின் முக்கிய சுற்றுலாத்தளமான கோவை குற்றாலத்தில் குளிக்க 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக,அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை குற்றால அருவியில் மழைநீருடன் சிறு பாறைகளும், கற்களும் வர வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடைப் போடபட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவானி அணையிலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கோவையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.