• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

February 3, 2021 தண்டோரா குழு

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.98 வது டிவிசன் பகுதியில் நடைபெற்ற இதில், குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் காதர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சேனாதிபதி,

தி.மு.க.தலைவர் செல்லும் இடங்களில் பொதுமக்களின் அமோக வரவேற்பு இருப்பதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ,மாபெரும் எழுச்சியோடு வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.இதில் 100 வது வார்டு வட்ட செயலாளர் மேட்டூர் மாணிக்கம்,குறிச்சி ஜெகதீஷ், பாலாஜி, நிர்மல் குமார், விவின், மேட்டூர் கார்த்தி,ப்ரவீண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க