• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நீடித்த நிலையான மாதவிடாய் குறித்த கருத்தரங்கு

February 11, 2020

கோவை பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நீடித்த நிலையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கல்லூரியின் சுயநிதி ஆங்கில துறையின் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சிபிஎன் டிரஸ்டிலிருந்து மருத்துவர் மஞ்சரி, குமுதசந்திரிகா ஆகியோர் நீடித்த நிலையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய குமுதா சந்திரிகா,

பொதுவாகவே மாதவிடாய் குறித்து நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கிறது. அது குறித்து இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மாதவிடாய் பற்றி வெட்கப்படாமல் பேசவேண்டும். பெற்றோரிடம் கூட தயக்கம் காட்டாமல் பேசவேண்டும். அப்படி பேசாமல் இருப்பதால் உடல்நலக்குறை ஏற்பட்டாலும் வெளியில் தெரியாமல்
தனிமையில் நிறைய கஷ்டப்படுகிறார்கள். பிற்காலத்தில் மாப்பிளை பார்க்கும் போது அவரிடம் மாதவிடாய் குறித்து தெரியுமா என கேட்கவேண்டும். ஏனெனில், ஆண்களும் மாதவிடாய் குறித்து அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் மனைவியின் கஷ்டங்களை புரிந்து நடந்து கொள்ள முடியும் என்றார்.

மேலும், தூக்கி எறியப்படும் சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் விளைவுகள் அதன் தடுப்பு முறைகள் குறித்து
கிராமாலயா சரோஜா மாணவிகளுக்கு விளக்கினார். இந்நிகழ்வில் ஆஸ்கர் வென்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இக்கருத்தரங்கில் தமிழ் செல்வி , சோபியா, பிரியா, தரண்யா,அனிதா, மதுமிதா, ப்ரியாதர்ஷினி, பூர்ணமதி, கீதாஞ்சலி, வசுமதி ரேமா, இந்துமதி உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க