• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு

January 17, 2020 தண்டோரா குழு

பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரஜினி அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர், சீதை உருவங்களை உடையின்றி எடுத்து வந்து செருப்பால் அடித்தாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியைப் பரப்பி, பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில், துக்ளக் விழாவில் ரஜினி பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேருதாஸ்,

ரஜினி மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும் திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் படிக்க