• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை

November 28, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது.4 தளங்கள் கொண்ட இங்கு தங்க நகை, வைரம், பிளாட்டினம், வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சுவற்றில் பொருத்தி இருந்த ஏசி வென்டிலேட்டரை கழட்டி அதன் வழியே உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடிக்குள் இறங்கி அங்கிருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று கடையை திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் ஏசி வெண்டிலேட்டரை கழட்டி அதன் வழியே புகுந்து தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊழியர்கள் கடை மேலாளருக்கு தகவல் கொடுத்தனர் அவர் உடனடியாக ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்துக்கு கோவை மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

மேலும் மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் ஏசி வெண்டிலேட்டர் கழட்டி உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.100 சவரன் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே கொள்ளை போன நகைகளின் விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் சண்முகம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க