February 15, 2026
தண்டோரா குழு
கோவை கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில், நியூ கோவை ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.
இத்திட்டத்தை சக்தி குழுமத் தலைவர் எம். மாணிக்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். யுனிவர்சல் ரேடியேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் மாதவன் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாட்டின் முன்னணி தொழில் முன்னோடிகளில் ஒருவரான அருட்செல்வர் டாக்டர் என். மகாலிங்கம் அவர்களால் தொடங்கப்பட்ட சக்தி குழுமம், சர்க்கரை, ஜவுளி, போக்குவரத்து, நிதி, காபி எஸ்டேட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்துறை வணிகங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி வீட்டு மனைகள், மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து 1.3 கிலோமீட்டர் மற்றும் தடாகம் சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திட்டத்தில் சிறுவாணி குடிநீர் வசதி, தார்சாலை, தெருவிளக்குகள், இயற்கை சூழல், அடித்தள வடிகால் அமைப்பு, சுற்றுச்சுவர், மேம்படுத்தப்பட்ட பூங்கா, பிக்கிள்பால் மைதானம், நடைபாதை உள்ளிட்ட பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட நகரமைப்பு திட்ட ஒப்புதல் மற்றும் நில ஆவண ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற இத்திட்டம், வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீட்டு மனை பகுதிகளைக் கொண்டதாகும். மொத்தம் 53 வீட்டு மனைகள் கொண்ட இத்திட்டம், பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலில், நவீன வசதிகளுடன் குடியிருப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
விழாவில் உரையாற்றிய சக்தி குழுமத் தலைவர் எம். மாணிக்கம்,
பவுண்டேஷன் ஒன் குழுமத்தின் தலைமை பொறுப்பை ராஜ்குமார் அவர்கள் ஏற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில், கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல வீட்டு மனை, வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கி வழங்கியுள்ளோம்.
அந்த வரிசையில், கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுமார் 3.75 ஏக்கர் பரப்பளவில் விரிவாக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் வீட்டு மனை திட்டமாகும். வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தில், தற்போது 50 சதவீத வீட்டு மனைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ராஜ்குமார்,
பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். தரமான கட்டமைப்பு, சிறந்த வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி என்பதே எங்களின் முதன்மை நோக்கம். மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் இதே தரநிலைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விற்பனை மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப 25 லட்சம் ரூபாய் முதல் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.
முன்னதாக சக்தி குழுமம் உருவாக்கிய கண்ணூர், அவிநாசி, சூலூர் பகுதிகளில் அமைந்துள்ள திட்டங்களில் நவீன வீடுகள் ஏற்கனவே கட்டி வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நேரில் பார்வையிடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நஞ்சுண்டாபுரம், கிருஷ்ணா காலனி பகுதியில் புதிய திட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், வளர்ச்சிப் பாதையில் எங்களை ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி,என தெரிவித்தார்.
இந்த துவக்க விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.