• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கல்யாண் ஜூவல்லரியில் பணியாற்றும் 51பேருக்கு கொரோனா தொற்று

August 18, 2020 தண்டோரா குழு

கோவை 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் கல்யாண் ஜூவல்லரி நகைக்கடையைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டதால், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.

இந்நிலையில், அங்குபணியாற்றி வந்த 90 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, கொடிசியா வளாகம், கற்பகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஓரே கடையில், 51 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்திற்குள் நகைக் கடைக்குச் சென்று வந்தவர்கள்,தாமாக முன்வந்து, அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டு, பல பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட காரணமாக இருந்த கல்யாண் ஜுவல்லரி நிர்வாகம் மீது சுகாதார துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின்,அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் கல்யாண் ஜூவல்லரி நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க