• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை- கண்ணனூர் ரெயில் 8 நாட்கள் பகுதி நேரம் ரத்து

August 27, 2022 தண்டோரா குழு

சேலம் கோட்ட ரெயில்வே
நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

கேரள மாநிலம் கண்ணனூர் அருகே உள்ள எடக்கோட் – கண்ணனூர் இடையே ரெயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கண்ணனூர் – வடகரை இடையே ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி, 27-ந் தேதி (இன்று) மற்றும் 28, 30, 31, வருகிற 1 முதல் 4-ந் தேதி வரை 8 நாட்கள் கோவையில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் கோவை -கண்ணனூர் தினசரி விரைவு ரெயில் (எண்: 16608) கோவையில் இருந்து வடகரை வரை மட்டுமே இயக்கப்படும் இந்த ரெயிலானது, மேற்கண்ட 8 நாள்களில் வடகரை – கண்ணனூர் இடையே இயக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க