• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா

November 29, 2024 தண்டோரா குழு

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா,டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன், வரவேற்புரையில்,தலைவர், டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் புதுடில்லியைச் சேர்ந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் உறுப்புச் செயலரும் தலைமை விருந்தினருமான பேராசிரியர் இராஜீவ்குமார் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையை வழங்கினார்கள்.

நடப்புக் கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கையை,கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்.யு.பிரபா சமர்ப்பித்தார். கல்லூரிச் செயலாளரும் அறங்காவலருமான டாக்டர் தவமணி.டி.பழனிசாமி,டாக்டர் அருண்.என்.பழனிசாமி ஆகியோர் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துரையை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட வகுப்புகளில் பயின்ற 567 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க