• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஈச்சனாரியில் பள்ளி வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

December 19, 2018 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரியில் பள்ளி வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஈச்சனாரியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.இதனால் பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மதுக்கரை வழியாக மாற்றுப்பதையில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று காலை ஈச்சனாரியில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது மேட்டுபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சென்ற தனியார் பேருந்து மோதியதில் அருகிலிருந்த இருசக்கரவாகனங்கள் மீது இரு பேருந்துகளும் மோதின இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். மற்றோரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பித்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,பாலம் கட்ட ஆரம்பித்ததிலிருந்து இருந்தே அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாகவும் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை கடைபிடிக்கமால் இருப்பதேயாகும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க