• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இருகூர் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் 6 அடி நீளச் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு

September 20, 2019 தண்டோரா குழு

கோவை இருகூர் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் 6 அடி நீளச் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் இருகூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்திற்கு 6 அடி கருப்பு சாரை பாம்பு புகுந்துள்ளது. அப்போது அங்கன்வாடி மையத்தில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்பவர் அங்கன்வாடி மையத்தின் சத்துணவு கூடத்தில் இருந்த பாம்பை பிடிக்க முயன்றார், அப்போது பாம்பு கடித்ததால் உடனடியாக மோகன்குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் அங்கிருந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது.பிடிபட்ட பாம்புடன் சிகிச்சைக்காக மோகன்குமார் அழைத்துவரப்பட்டதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க