• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் புத்தாண்டில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிப்பு

January 1, 2019 தண்டோரா குழு

கோவை ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசளிக்கப்ட்டது.

புத்தாண்டு தினத்தன்று முதலில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் தலைவர் மீனா ஜெயக்குமார் தலைமையில் இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுக்கு தங்கம் மோதிரங்களை வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எங்களது அறக்கட்டளை சார்பில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு, பெண் குழந்தைகள், முதியோர்கள் ஆகியோருக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறோம். திண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப் பட்டிருந்த பாச்சலூர் என்ற மலை கிராமத்தில் முதல் முதலாக நிவாரண உதவிகளை செய்தோம். மேலும், அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறோம். உடல் ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வருகிறோம். பல்வேறு நலத்திட்டங்களை இந்த ஆண்டு செய்ய இருக்கிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் ஆலம் ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஐஸ்வரியா பிரியா சந்திரன், செல்வி, கீர்த்தி ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க