• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆணைக்கட்டியில் உணவு தேடி வந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம்

April 20, 2019 தண்டோரா குழு

கோவை ஆணைக்கட்டியில் உணவு தேடி வந்த காட்டு யானை வாசலில் போடப்பட்டுருந்த சிமென்ட் ஷீட் மற்றும் ஓடுகளை தல்லியதில் வீடு சேதம் அடைந்தது.

ஆனைகட்டி தூமனூர் மலை கிராமம் காட்டுசாலை பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இந்நிலையில்,நேற்று இரவு ஒற்றை காட்டு யானை உணவு தேடி பெருமாள் வீட்டுக்குவந்துள்ளது. அப்போது,அங்கு வாசலில் போடப்பட்டுருந்த சிமென்ட் ஷீட் மற்றும் ஓடுகளை உணவுக்காக தல்லியதில் சேதம் அடைந்தது.

யானை இருக்கும் தகவல் தெரிந்து ஊர் மக்கள் பெருமாள் வீட்டிற்க்கு விரைந்து வந்து ஒற்றை யானையை விரட்டினர்.பெருமாள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அதிஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் ஊர் மக்கள் காப்பாற்றினர்.

வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை உள்ள நிலையில் பல இடங்களிள் காட்டுத் தீ பிடித்து பல ஏக்கர் வனப்பகுதி தீயில் சேதம் அடைந்துள்ளது.உணவு மற்றும் தண்ணீருக்காக யானைகள் மக்கள் வசிப்பிடம் தேடி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க